Loading

மகாதேவ குருஜி வாழ்க்கை வரலாறு – கல்விக்கு அர்ப்பணித்த வாழ்வு

அறிவே ஆற்றல்! கல்வியே செல்வம்!

THONDRIN PUGAZHODU………..என்ற தெய்வப்புலவரின் திருவாக்குக்கேற்ப 1917ஆம் ஆண்டு நாகை அருகே உள்ள தேவூரில் D.கைலாச சிவம் ,மீனாட்சி தம்பதியரின் தலைமகனாக பிறந்தார். இளமை பருவத்தில் வறுமையின் பிடியில் நமது நிறுவனரின் பள்ளி பருவம் சென்ற நிலைமையிலும் கல்வி, கலை, இலக்கியம், இசை, விளையாட்டு என அனைத்திலும் சிறந்து விளங்கினார்.

கல்வியே அனைத்திற்கும் ஆதாரம் என்பதை உணர்ந்து, பள்ளிக்கல்வியில் நாகை மாவட்டத்தின் முதல் மாணவனாக திகழ்ந்து, தான் பயின்ற நாகை தேசிய மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்தார். கல்வி ஒன்றே மனிதகுலத்தின் அனைத்து முன்னேற்றத்திற்கும் வழி செய்யும், அதை அனைவருக்கும் வழங்குவதே தனது வாழ்க்கை குறிக்கோள் என முடிவு செய்து ஆடுதுறை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்று ஆசிரியராக பணியாற்ற தொடங்கினார்.

1941 ஆம் ஆண்டு விடயல் கருப்பூர் கிராமவாசிகள் மற்றும் பெரியோர்களின் ஒத்துழைப்போடு அன்றைய ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று உதவி பெறும் நடுநிலைப்பள்ளியை நிறுவினார். 15 க்கும் மேற்பட்ட கிராம மாணவர்கள் இப்பள்ளி மூலம் தங்களது பள்ளிப்படிப்பை மேற்கொண்டனர்.

சிறப்பான தலைமையாசிரியராக, நிர்வாகியாக திகழ்ந்த நமது நிறுவனரால் இன்றளவும் பலர் வேலைவாய்ப்பையும், கல்வியையும், வளமான வாழ்வையும் பெற்றுள்ளனர். இவரது பணியை பாராட்டி "நல்லாசிரியர் விருது" அன்றைய ஆளுநர் திரு. பிரபுதாஸ் பட்வாரி அவர்களால் வழங்கப்பட்டது.

1976 ல் பணி ஓய்விற்கு பின்னர் தனது பணியின் மீது கொண்ட பற்றால் வலங்கைமானில் ஆங்கில வழி பள்ளியை தொடங்கி சிறப்பாக செயல்பட்டார். 1992 டிசம்பர் 12 நம்மை விட்டு மறைந்த நமது நிறுவனர் இறுதி வரை கல்விப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் அவரது கல்விப்பணி, அவரது பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை மூலம் நல்லோர்கள், நண்பர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் ஒத்துழைப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அறிவே ஆற்றல்! கல்வியே செல்வம்!